‘பிரையன் டிரேசி வெற்றி நூலகம்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஏழு புத்தகங்கள் மேலாளர்களுக்கும் தொழில்முறையாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய சக்திவாய்ந்த கையேடுகள் என்றால் அது மிகையல்ல. வியாபாரம் தொடர்பான முக்கியமான அம்சங்கள் குறித்த நம்பகமான உள்நோக்குகளை விரைவாகவும் சுலபமாகவும் பெற விரும்புகின்ற எவரொருவரும் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை. கைக்கு அடக்கமான இந்நூல்கள், அடிப்படை வியாபாரத் திறமைகளைக் கற்றுக் கொள்ளவும் அவற்றை மெருகேற்றவும் உதவக்கூடிய உண்மையான எடுத்துக்காட்டுகளும் நடைமுறை உத்திகளும் நிரம்பப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இடம்பெற்றுள்ள ‘விற்பனையில் வெற்றி’ எனும் இந்நூலில், விற்பனைத் தொழிலில் நீங்கள் வெற்றிக் கொடி நாட்டுவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய 21 உத்திகளை விற்பனை விற்பன்னரான பிரையன் டிரேசி விரிவாக விளக்கியிருக்கிறார். அவற்றில் பின்வருவனவும் அடங்கும்: · தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, ஒவ்வொரு நிமிடத்தையும் சிறப்பாகப் பயன்படுத்துதல் · உங்களுடைய விற்பனைப் பொருளைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் விரல்நுனியில் வைத்திருத்தல் · வாடிக்கையாளர்களாக ஆவதற்குச் சாத்தியமுள்ளவர்களுடன் துவக்கத்திலேயே நம்பிக்கையையும் ஒரு நல்ல உறவையும் வளர்த்தெடுத்தல் · ஆற்றல்மிக்க விளக்கவுரைகளை உருவாக்குதல் · ஆறு முக்கிய ஆட்சேபனைகளைச் சமாளித்தல் நடவடிக்கை எடுக்கும்படி வாடிக்கையாளர்களைத் தூண்டுதல்
show more...Just click on START button on Telegram Bot