போபால் - அழிவின் அரசியல்

போபால் - அழிவின் அரசியல்

Author
மருதன்
Publisher
கிழக்கு
Language
Tamil
Edition
First
Year
2010
Page
252
ISBN
8184935439,9788184935431
File Type
pdf
File Size
4.8 MiB

இன்றைய தேதி வரை இருபத்து மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 'ஆயிரக்கணக்கான சடலங்கள் இறைந்து கிடக்கின்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மனித உடல்கள். அல்லது, இறந்துகொண்டிருக்கும் மனிதர்கள்.' - ஹமீதியா மருத்துவமனையில் ஒரு தன்னார்வலர் நிரந்தரமாகவும் பகுதியளவிலும் முடமாகிப்போனவர்கள், ஐந்து லட்சம் பேர். 'அதற்கு முன்புவரை நான் மருத்துவமனை சென்றதில்லை. விஷ வாயு சுவாசித்த பிறகு மருத்துவமனையே பழியாகக் கிடக்கிறேன். சரி இத்தோடு சரியாகிவிடும் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்வேன். இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்னமும் என் உடல் நடுங்குகிறது ஜகி முகமத், 53 வயது 'கருச்சிதைவு ஏற்பட்டது போன்ற வலி அது. வீட்டை விட்டு நகரமுடியவில்லை. ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. பாலும், பழமும் சாப்பிடுங்கள், உடலில் வலு இல்லை என்றார் மருத்துவர். எங்கே போவேன்? ரொட்டியே தினமும் கிடைப்பதில்லை.' - சிதாரா, 40 வயது உலகின் மிகக் கொடூரமான ஒரு பேரழிவை, கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து என்கிறது யூனியன் கார்பைட். வழக்கு விசாரணையும் அவ்வாறே நடந்து முடிந்து, தீர்ப்பும் எழுதப்பட்டுவிட்டது. போபால் என்பது ஒருமுறை நடந்துமுடிந்துவிட்ட ஒரு சம்பவம் அல்ல. இந்நாட்டு மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட மிகக் கடுமையான பயங்கரவாத வன்முறை. நள்ளிரவில் நடத்தப்பட்ட ரசாயனத் தாக்குதல். மறக்கவோ மன்னிக்கவோ முடியாத ஒரு துரோகச் செயல்.

show more...

How to Download?!!!

Just click on START button on Telegram Bot

Free Download Book