பெண்களின் அடிப்படை உரிமைகள் என்னென்ன? பெண்களின் நலன்களைப் பாதுகாக்க என்னென்ன சட்டங்கள் உள்ளன? காதல், திருமணம், விவாகரத்து, குழந்தை வளர்ப்பு, சொத்துப் பங்கீடு, வன்முறை, சைபர் கிரைம், ஆடைக் கட்டுப்பாடு, பாலியல் குற்றங்கள் என அன்றாட வாழ்விலும் பணியிடங்களிலும் பெண்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சட்டப்பூர்வமான தீர்வுகளைப் பெறுவது எப்படி? ஒவ்வொன்றையும் நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் நூலாசிரியர் வைதேசி பாலாஜி சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார். இந்தியா முழுவதிலும் நடைபெற்ற நீதிமன்ற வழக்குகளை விரிவாக அலசி ஆராய்ந்து பல பயனுள்ள தகவல்களை அளித்திருக்கிறார். உங்கள் பிரச்னையை எப்படி ஒரு வழக்கறிஞரிடம் கொண்டு செல்வது என்பது தொடங்கி சட்ட உதவிக்கு நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலரின் தொடர்பு விவரங்கள்வரை அனைத்தையும் தந்திருக்கிறார். ராணி வார இதழில் தொடராக வெளிவந்து ஏகப்பட்ட பெண் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் படைப்பு தற்போது நூல் வடிவம் பெறுகிறது. படிக்க, பரிசளிக்க, பாதுகாக்க ஒரு பயனுள்ள நூல்.
show more...Just click on START button on Telegram Bot