
முசோலினி இன்னமும்கூட ஒரு புதிராகவே இருந்து வருகிறார். இரண்டாம் உலகப் போரின் முக்கிய வில்லனாக, ஹிட்லரின் கூட்டாளியாக, பாசிஸத்தை அறிமுகப்படுத்தியவராக மட்டுமே நாம் முசோலினியை அறிந்திருக்கிறோம். உண்மையில், அவருடைய ஆளுமை விசித்திரமானது. தொடக்கத்தில் இத்தாலியில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் அபார-மானவை. அசாதாரணமான முறையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்திருக்கிறார். கட்டுக்கோப்பான ஓர் அரசியல் கட்சியை உருவாக்கி வழிநடத்தியிருக்கிறார். பண்டைய ரோம சாம்ராஜ்ஜியத்தின் பெருமிதங்களை மீட்டெடுப்பார் என்று இத்தாலியர்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
show more...Just click on START button on Telegram Bot