ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள் எல்லாருமே மழையின் அடிமைகள். எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக்கொண்ட ஒரு நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். எளிமையான மனிதர்கள். ஆனால், அவர்கள் சித்திரிக்கப்பட்டிருக்கும் விதம் பிரமிக்கத்தக்கது. அத்தெருவில் யாரும் யாரையும் நேசிக்காமல் இருந்துவிடவில்லை. அவரவர்கள் போக்கில் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள் அல்லது நேசமுடனிருந்து பிரியம் செலுத்துகிறார்கள். நம் பக்கத்து வீட்டு நபர்களைப் போல் தோற்றமளிக்கக்கூடிய மிகச் சாதாரணமான மனிதர்களைக் கொண்டும் ஓர் அசாதாரணமான நாவலை உருவாக்கமுடியும் என்பதை மிக அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் வண்ணநிலவன். துன்பங்கள் அறவே ஒழிந்துவிடவில்லை. சிறிதே வீரியத்தை இழந்து போயிருந்தன. அடுத்த நாள், அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருஷம் வரையிலும்கூட நீடித்திருக்கப் போகிற துக்கம் இப்போதும் இருந்தது. சின்னச் சின்ன சந்தோஷங்களும் நிரந்தரமாகிப் போன துயரங்களுமாக நீண்டுகொண்டே போகிறது வாழ்க்கை. ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வைப் பிரதிபலிக்க முடியாவிட்டாலும், ஏதேனும் ஒரு கணத்தை, சிறு அசைவை நாம் உணரும்படி செய்கிறபோது படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நிறைவைத் தந்துவிடுகிறது. அந்த வகையில், இந்த நாவல் தமிழில் வெளி வந்த மிக முக்கியமான நாவல்களில் ஒன்று. இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: வே. சபாநாயகம் - 07-01-10 பார்வையாளன் - 24-03-10
show more...Just click on START button on Telegram Bot