“அதிர்ஷ்ட விஞ்ஞானம்” என்னும் அற்புத எண்சோதிட நூல் பண்டிட் ஸேதுராமன் அவர்களால் 1954ம் ஆண்டில் வெளியிடப்பட்டு உலக பிரசித்தி பெற்றது. சுய விளம்பரமும், விற்பனை முயற்சியும் இன்றி 2014ம் ஆண்டு வரை 27 பதிப்புகள் விற்பனையாகியுள்ளது இதன் மகத்துவத்திற்கு சான்று. சால்திய எண் கணித முறைப்படி ஆராய்ந்து எழுதப்பட்ட நூல். உலகில் முதல்முறையாக 108 எண்கள் வரை பலன் கூறப்பட்டுள்ளது இதன் சிறப்பு ஆகும். இந்நூல், பிறந்த தேதிக்கேற்றவாறு ஒருவர் எவ்வாறு தன் பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், முக்கியமான காரியங்களை எந்தெந்த நாட்களில் செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்குகிறது. 7,8,16,22,26,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண்கள் 18,29,44,49,63,87 என அமைய பெற்றவர்களும் தமது வாழ்க்கையை ஒரு மறு ஆய்வு செய்யவும், எண்களின் எதிர்மறையான அதிர்வுகளை நிவர்த்தி செய்து வெற்றி காண உதவும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. இந்நூல் ஆசிரியர்களின் வாடிக்கையாளர் வரிசையில், மன்னர்களும், மந்திரிகளும், தொழில்அதிபர்களும், அறிவியல் மேதைகளும் பல தரப்பட்ட பாமரமக்களும் உள்ளனர் என்பது, எண்களால் ஏற்றம் பெற எதுவுமே தடையல்ல என்பதை தான் காட்டுகிறது. குறைந்த அதிர்ஷ்டம் உள்ளவர்கள், நிறைந்த அதிர்ஷ்டம் பெறவும், அதிர்ஷ்டசாலிகள் எனப்படுவோர் மேன்மேலும் அதிர்ஷ்டசாலிகளாகவும் வழிகாட்டும் இந்நூல் வாசகர்களின் வாழ்க்கை துணையாக அமையும். வெற்றியின் சிகரத்தை அடைய உதவுவது மட்டுமன்றி அங்கு நிரந்தரமாக வாழவும் முடியும் என்று உறுதிப்பட கூறுவது இந்நூல் ஒன்றே. தெள்ளியநடையில் எல்லோரும் புரிந்துக்கொள்ளும் வண்ணம் எளிய முறையில் எழுதி வெளியிடப்பட்ட அறிய எண்சோதிட நூல் “அதிர்ஷ்ட விஞ்ஞானம்” ஒன்று தான். “அதிர்ஷ்ட விஞ்ஞானம்” உங்கள் கையில் என்றால் அதிர்ஷ்டமே உங்கள் கையில் தான்!
show more...Just click on START button on Telegram Bot